Homeஆன்மீகம்ஆண்கள் ஏன் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது?

ஆண்கள் ஏன் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது?

விளக்கில் எரிகின்ற ஜோதி தான் உண்மையில் கடவுள் என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. எந்த வீட்டில் விளக்கேற்றி காலை, அந்தி இருவேளையும் வழிபடுகின்றனரோ அந்த வீட்டில் செல்வ வளமும், நிம்மதியும் நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், ஆண்கள் விளக்கு ஏற்றுவதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் விளக்கேற்றினால் பலன் கிடைக்குமா ஏன் ஆண்களை விளக்கேற்றக் கூடாது என்று தெரிவிக்கின்றனர் என பல விஷயங்களை இங்கு பார்ப்போம்.

விளக்கு மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. தீபம் ஈசனை குறிக்கிறது. பெண்கள் மகாலட்சுமியாக இருப்பதால் அவர்களது கைகளால் தீபம் ஏற்றும் பொழுது, மகாலட்சுமி மனம் உவந்து செல்வங்களை வாரி வழங்குகின்றாள். ஈசனை துதிக்கின்ற காரணத்தால் வாழ்க்கையில் துன்பங்கள் அனைத்தும் நீங்கி அருள் கிடைக்கிறது.

இதுதான் நமது முன்னோர்கள் வழி வழியாக கடைபிடித்து வந்த ஒரு விஷயம். இருப்பினும், ஆண்கள் ஏன் ஏற்றக் கூடாது என்று கேள்வி எழுகிறது. இதற்கு காரணம், ஆண்கள் அலைபாயும் மனம் கொண்டவர்கள். அவர்களால் ஒருங்கிணைந்த நிலையில் கடவுளை துதிக்கவும், பொறுமையுடன் பூஜை செய்யவும் இயலாது.

பொறுமை இன்மை காரணமாக அவர்கள் ஒருங்கிணைந்த சிந்தனையில் கடவுளை பூஜிப்பது கேள்விக்குறிதான். இதில் ஒரு சில ஆண்கள் மட்டும் விதிவிலக்கு. எனவே, தான் பெரும்பாலும் பெண்கள் விளக்கேற்ற வேண்டும் அவர்கள் தான் வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பெண்கள் பொறுமையாகவும், பொறுப்புணர்வுடனும் இருக்கின்றனர். ஆனால், இதே அளவு ஆண்களுக்கு பொறுமை இருப்பதில்லை. இதனால், தான் குடும்ப நன்மை குறித்து பெண்கள் சிந்தித்து, விளக்கு ஏற்றி ஆண்டவனை வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது.