Homeஇலங்கைபாக்கு விலை 20 ரூபாயாக உயர்வு

பாக்கு விலை 20 ரூபாயாக உயர்வு

தற்போது சந்தையில் பாக்கின் விலை 20 ரூபாய் வரை உயர்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாக்கின் அறுவடை குறைந்துள்ள காரணத்தால் பாக்கின் விலை அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் சில பகுதிகளில் பாக்கு ஒன்று 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், அதன் காரணமாக வெற்றிலை கூறு ஒன்றின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெத தும்புர, குண்டசாலை, பன்வில ஆகிய பகுதிகளில் பாக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் நிலையில் தற்போதைய காலநிலையால் உற்பத்தியில் குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.