Homeஇலங்கைஇணையவழியில் மதுபான விநியோகத்துக்கு அனுமதி மறுப்பு

இணையவழியில் மதுபான விநியோகத்துக்கு அனுமதி மறுப்பு

இலங்கையில் இணையவழியில் மதுபான விநியோகம் மேற்கொள்ளும் முறைமைக்கு கொவிட் தடுப்பு செயல்பாட்டு மையம் அனுமதி வழங்கவில்லை என, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சகல மதுபான நிலையங்களும் மூடப்பட்டு, முத்திரையிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரித்துவருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அதனை தவிர்க்கும் விதமாக இணையத்தளம் ஊடாக பல்பொருள் அங்காடிகள் ஊடாக மதுபான விற்பனைக்கு செய்ய அனுமதி வழங்குமாறு பல்வேறு தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து, பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் வீடுகளுக்கு இணையம் ஊடாக மது விநியோகம் மேற்கொள்ளுமாறு இலங்கை மதுவரி திணைக்கள ஆணையாளரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு நிதியமைச்சு நேற்று (16) அனுமதி வழங்கியிருந்தது. எனினும், இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில், இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.