Homeஇலங்கைஇலங்கைக்கு புதிய தூதுவரை அறிவித்தது அமெரிக்கா

இலங்கைக்கு புதிய தூதுவரை அறிவித்தது அமெரிக்கா

இலங்கைக்கான புதிய தூதுவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடேன் தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

தற்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அலெய்னா பி டெ்ப்லிட்ஸ் பணியாற்றி வரும் நிலையில், அவருக்கு பதிலாகவே ஜூலி ஜியோ சுன் என்பவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நியமனம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில், இலங்கையுடன் சேர்த்து 09 நாடுகளுக்கான தனது தூதுவர்களை மாற்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடேன் நடவடிக்கை எடுத்துள்ளார்.