Homeஅரசியல்ரணில் எதிர்வரும் 23ஆம் திகதி நாடாளுமன்றம் செல்வார்: வஜிர அபேவர்த்தன

ரணில் எதிர்வரும் 23ஆம் திகதி நாடாளுமன்றம் செல்வார்: வஜிர அபேவர்த்தன

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

அவரது பெயர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று(16) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேய இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ‘நாட்டில் 5 தடவைகள் பிரதமராக இருந்த ரணில் விக்ரசிங்க, நாட்டின் அபிவிருத்திக்காக பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருந்தார்.

ஆனால் தற்போது அந்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் செயலிழந்துள்ளதால் நாட்டின் வருமானம் இல்லாமல் போயிருக்கின்றது. குறிப்பாக தற்போதுள்ள பெரும் பிரச்சினைதான் விவசாயிகளுக்கான உரம் இல்லாமையாகும்.

நாடு எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான நிலையில், சர்வதேச நாடுகளுடன் சிறந்த உறவை வைத்திருப்பவரும் சிறந்த அனுபவமும் உள்ள தலைவரான ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் செல்வதே சரியாகும் என ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு ஏகமனதாக தீர்மானித்தது.

அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்வின் பெயரை கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவுக்குவுக்கு இன்று சமர்ப்பித்தார்.

அதன் பிரகாரம் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 23ஆம் திகதி காலை 10 மணிக்கு பாராளுமன்றம் சென்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார் என்றார்.