Tue, Aug3, 2021
Homeஇலங்கைஒன்லைனில் மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி

ஒன்லைனில் மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி

பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் வீடுகளுக்கு இணையம் ஊடாக மது விநியோகம் மேற்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு நிதியமைச்சு அனுமதி அளித்துள்ளதாக இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சகல மதுபான நிலையங்களும் மூடப்பட்டு, முத்திரையிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரித்துவருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதுடன், அதனை தவிர்க்கும் விதமாக இணையத்தளம் ஊடாக சிறப்பங்காடிகள் மூலம் மதுபான விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு மதுவரி திணைக்களத்தினால் நிதியமைச்சிடம் கோரப்பட்டிருந்தது.