Thu, Oct21, 2021
Homeதலைப்புச் செய்திகள்வங்கி கொள்ளை வழக்கில் பிணையில் வந்து மீண்டும் வங்கியில் கொள்ளையடித்த திருடன்

வங்கி கொள்ளை வழக்கில் பிணையில் வந்து மீண்டும் வங்கியில் கொள்ளையடித்த திருடன்

வங்கி கொள்ளை வழக்கில் சிக்கிய நபர் பிணையில் வெளியே வந்து மறுநாளே வங்கி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த சீ நிகோ என்பவர் கடந்த வாரம் அமெரிக்காவின கேனல் ஸ்டீரீட் என்ற பகுதியில் உள்ள சேஸ் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவர் வங்கிக்குள் நுழைந்து அங்கிருந்த அதிகாரியிடம் ஒரு துண்டு சீட்டு கொடுத்துள்ளார். அதில் “என்னிடம் துப்பாக்கி இருக்கிறது” என எழுதியிருந்தது. அதன் பின் சீ நிகோ அவரிடம் “இது வங்கிக் கொள்ளை எனது பேக்கில் பணத்தை போடுங்கள்” என மிரட்டியுள்ளார்.

அங்கிருந்து அவர் கொஞ்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். ஆனால் சில மணி நேரங்களில் அவர் பொலிஸாரிடம் சிக்கிவிட்டார்.

இதையடுத்து அந்த வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது. நீதிமன்றில் அவர் பிணை கேட்டிருந்தார். அதன்படி அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.

பிணையில் வெளிவந்த அவர் மீண்டும் வேறுபகுதியில் உள்ள சேஸ் வங்கியில் கொள்ளையடிக்க முயன்று 100 டாலர் பணத்தை கொள்ளயடித்துள்ளார். ஆனால் இந்த முறை சில நிமிடங்களிலேயே பொலிஸாரிடம் சிக்கிக்கொண்டார்.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க