Thu, Oct21, 2021
Homeஇந்தியாஇறந்தவரை உயிர்ப்பிக்க விசித்திர சடங்கு செய்த கிராமம்!

இறந்தவரை உயிர்ப்பிக்க விசித்திர சடங்கு செய்த கிராமம்!

ஒடிஷாவின் ஒரு கிராமத்தில் இறந்தவரின் உயிரை மீட்டெடுக்கும் சடங்கு முறை ஒன்று, இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தியாவில் என்னதான் அறிவியலும் தொழில்நுட்பமும் முன்னேற்றம் அடைந்து இருந்தாலும் ஒரு பக்க மக்கள் அறியாமையில் மூழ்கி இருப்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

அந்த கிராமத்தில் கோவில் திருவிழா நடந்துக்கொண்டிருந்த போது இறந்த ஒருவருக்கு இறுதி சடங்குகளை நிகழ்த்துவதற்கு பதிலாக அவரை மீண்டும் உயிர்ப்பிக்க வைக்க அவர்கள் சடங்குகளை செய்துள்ளனர்.

இறந்தவர் சிக்கார்பூர் கிராமத்தை சேர்ந்த ரபி நஹக் என்பவர் ஆவார். இவர் ஒடிசாவில் உள்ள பராசாஹியில் திருவிழா தொடங்கியுள்ளது.

ஆனால் இரண்டு நாட்கள் முன்பாகவே இந்த மனிதர் உடல் நலமில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

அவரது பிரேத பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை முடிந்து அவரது சடலமானது குடும்பத்தார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் குடும்பத்தார் அவருக்கு இறுதி சடங்குகளை நடத்துவதற்கு பதிலாக கிராம வாசிகளுடன் சேர்ந்து அவரை உயிர்பிக்க சில சடங்குகளையும் பிராத்தனைகளையும் செய்ய துவங்கியுள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க