16 மாணவிகள் துஷ்பிரயோகம்: ஆசிரியரிடம் விசாரணை

பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில், சூம் தொழில்நுட்பம் ஊடாகவும் மாணவிகளுடன் தொடர்பினை ஏற்படுத்தும் ஆசிரியர் மாணவிகளை வற்புறுத்தி ஆடைகளை கலைய வைத்து அதனையும் வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார்.

16 மாணவிகள் துஷ்பிரயோகம்: ஆசிரியரிடம் விசாரணை

களுத்துறை பிரதேசத்தில்  பாடசாலை ஒன்றில் ஆசிரியராக செயற்படும் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக களுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளை மையப்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட ஆசிரியர்  மாணவிகளை வீடுகளுக்கு செல்ல உதவுவதாக கூறி தனது காரில் ஏற்றிச்சென்று களுத்துறை லாகொஸ்வத்தை பகுதியில் வைத்து  வைத்து துஷ்பிரயோகம் செய்து அதனை  தொலைபேசியில்  பதிவு செய்து வைத்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில், சூம் தொழில்நுட்பம் ஊடாகவும் மாணவிகளுடன் தொடர்பினை ஏற்படுத்தும் ஆசிரியர் மாணவிகளை வற்புறுத்தி ஆடைகளை கலைய வைத்து அதனையும் வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார்.

இவை அனைத்தும் ஆசிரியரின் மடிகணினியில் இருந்துள்ளது. அவற்றை ஆசிரியரின் மனைவி  தற்​செயலாக பார்த்ததை அடுத்து, அவர் மாணவிகளின் பெற்றோருக்கு இது தொடர்பில் அறிவிக்கவே பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே  தற்போது  குறித்த ஆசிரியர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார்   தெரிவித்துள்ளனர். இவர், அந்த பிரதேசத்தில் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW