இலங்கைதலைப்புச் செய்திகள்

153 தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்

153 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் போது சித்தியடைந்தவர்கள் புதிய அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் கல்விச்சேவை ஆணைக்குழுவினால் இவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் 373 தேசிய பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில், அவற்றில் 278 தேசிய பாடசாலைகளுக்கு உரிய தரத்திலான அதிபர்கள் இதுவரை காலம் நியமிக்கப்படவில்லை என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்களை கல்வி அமைச்சர் வழங்கியுள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close