Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

1000 ரூபாய் விவகாரம்… இன்று மீண்டும் கூடுகிறது சம்பள நிர்ணய சபை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக சம்பள நிர்ணய சபை இன்று மீண்டும் கூட உள்ளது.

கடந்த 8ஆம் திகதி கூடிய சம்பள நிர்ணய சபை, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனமாக 900 ரூபாயும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 100 ரூபாயும் சேர்த்து ஆயிரம் ரூபாய் நாளாந்தம் சம்பள வழங்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது.

இந்த தீர்மானத்திற்கு ஆட்சேபனைகளை முன்வைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தில் 200க்கும் அதிகமான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆட்சேபனைகளை விசாரணை செய்வதற்காக கடந்த 19 ஆம் திகதி மீண்டும் சம்பள சபை கூடியது.

எனினும் அன்றைய தினம் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தின் 8 பிரதிநிதிகள் பங்கேற்றிருந்த நிலையில், முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் ஒரு பிரதிநிதி மாத்திரமே பங்கேற்றிருந்தார்.

எனவே, கூட்டத்தை நடத்துவதற்கான குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாமை காரணமாக, குறித்த தினத்தில் கூட்டத்தை நடத்த முடியாமல் போன நிலையில் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதேநேரம் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையிலும், முதலாளிமார் சம்மேளனத்தின் உரிய பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால், வேதன கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய செயற்படுவது குறித்தும் அரச தரப்பு அவதானம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பள நிர்ணய சபையானது, தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றின் தலா 8 பிரதிநிதிகளையும், அரசாங்கத் தரப்பினர் 3 பிரதிநிதிகளையும் கொண்டுள்ளது.

சம்பள நிர்ணய சபை கூடுவதற்கான குறைந்தப்பட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 5 ஆகும்.

அதில், தொழிற்சங்க பிரதிநிதிகள் இரண்டு பேரும், முதலாளிமார் சம்மேளனத்தின் இரண்டு பிரதிநிதிகளும், அரசாங்க பிரிதிநிதி ஒருவரும் உள்ளடங்க வேண்டும்.

சம்பள நிர்ணய சபையின் பிரதிநிதி ஒருவர், தொடர்ச்சியாக மூன்று பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதை தவிர்ப்பாராயின், அவரை நீக்குவதற்கும், புதிய பிரதிநிதியை நியமிப்பதற்கும் தொழில் அமைச்சருக்கு அதிகாரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x