Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

100 ஆண்டுகளுக்கு முன்பு உலகை ஆட்டிப்படைத்த பெருந்தொற்று நோய்.. எத்தனை கோடி பேர் இறந்தனர் தெரியுமா..?

கடந்த ஓராண்டாக உலகமே கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வருகிறது. கொரோனாவால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோரின் உயிரையும் பறித்தது.

இதுஒருபுறமிருக்க, மற்றொரு புறம் கொரோனா ஊரடங்கால் பல நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கபட்டதுடன், பலர் வேலை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

தற்போது தான் பல நாடுகள் அதிலிருந்து மீண்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி பல்வேறு நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், நிலைமை விரைவில் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் உலகப் போரின் இறுதி நாட்களில் உலகம் அமைதிக்கு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு புது வகைக் காய்ச்சல் மக்களை கொல்ல தொடங்கியது.

அது தான் ஸ்பானிஷ் காய்ச்சல். இந்த பெருந்தொற்று நோயால், மருத்துவமனைகள் நிரம்பி வழந்தன. கொரோனாவை போல, இந்த காய்ச்சலும் உலகம் முழுவதும் பரவியதால், இதை பற்றிய செய்திகள் மருத்துவ இதழ்களில் வெளிவரத் தொடங்கின.

இந்த ஸ்பானிஷ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நபர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன், ரத்தத்தில் ஒக்ஸிஜன் குறைபாட்டால் அவர்களின் உடலும் வெளிர் நீல நிறமாக மாறியது.
பின்னர் நோய் முற்றினால், சிகிச்சை பலனின்றி, இரத்தம் கக்கி மடிந்தனர். இப்படி இறந்தவர்கள் அனைவரும், 20 – 40 வயதுக்குட்பட்டவர்கள் என்பதே வேதனையின் உச்சம்..

இதில் பெரும்பாலானவர்கள் உடல் பலம் வாயந்த ஆண்கள் என்றும், உலகப் போரில் கலந்து கொண்ட இராணுவ வீர்கள், அல்லது கைதிகளாக பிடிக்கப்பட்டு வதை முகாம்களில் வாழ்ந்த எதிரணி வீரர்கள் அல்லது புரட்சி செய்த பொது மக்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நோயும் முதலில் சீனாவில் தான் பரவத் தொடங்கியது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலக முழுவதும் பரவிய இந்த நோய், கால்பதிக்காத நாடுகளே இல்லை. அதனால் தான் வெறும் 18 மாதங்களில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரை கொன்றது. இதன் காரணமாக் சுமார் 50 – 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனர்.

இறப்புகளின் எண்ணிக்கை பற்றிய சரியான தகவல்கள் இன்னும் மழுப்பலாகவே உள்ளன, ஆனால் உலகளாவிய இறப்பு புள்ளிவிவரங்கள் படி இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 20 சதவிகிதம் பேர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நோயினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு உலகப் போர்களிலும் ஒட்டு மொத்தமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் அதிகம் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

முதலாம் உலகப் போரை தொடர்ந்து உலகம் முழுவதிலும் இருந்த ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும், தணிக்கைகளும் விதிக்கப்பட்டு இருந்தன. எனவே நோயின் தீவிரம், பரவல் பற்றிய செய்திகள், அதிலும் குறிப்பாக இராணுவ வீரர்களின் இறப்புகள் பற்றி செய்திகள் அரசாங்கங்களால் மூடி மறைக்கப்பட்டன.

அந்தக் காலக்கட்டத்தில் முழு ஊடக சுதந்திரம் வழங்கப்பட்ட ஒரே ஒரு நாடாக ஸ்பெயின் மட்டுமே இருந்தது. உலகப் போரில் ஸ்பெயினின் பங்கு குறைவு என்பதே இதற்கு காரணம். இதனால் இந்த நோய் பற்றிய தகவல்கள் ஸ்பானிய மொழியில் பத்திரிகைகளில் தொடர்ந்தும் வெளி வந்த காரணத்தால் இந்த நோய் ஸ்பானிஷ் ப்ஃளு என்ற பெயர் வந்தது..

உலகம் முழுவதும் இந்த நோயின் தாக்கத்தால் பள்ளிகள், திரையரங்குகள், சந்தைகள் என மக்கள் கூடும் எல்லா பொது இடங்களும் மூடப்பட்டன. நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.
ஆனால் அப்போது உலகப் போர் நடந்த காரணத்தினாலும், குறைந்த மருத்துவ அறிவு, சிப்பாய்கள் கப்பல்கள் மூலமாக நாடு விட்டு நாடு சென்றது போன்ற காரணிகள் நோய் வீரியமாகவும் இலகுவாகவும் பரவுவதற்கு காரணமாக அமைந்ததன.

அதிஷ்டவசமாக உலகம் முழுவதும் பரவிய இந்த நோயிலிருந்து ஒரு சில தீவுகளும், பின் தங்கிய கிரமாப்புறங்களும் தப்பித்தன. அவை Escape Community என அடையாளப்படுத்தப்பட்டன.
சாதாரணமாக பறவைகளில் நோயை ஏற்படுத்திய இந்த இன்புளுவன்சா அதில் ஏற்பட்ட மரபுனுப் பிறழ்வு காரணமாக( Genetic Mutation) அப்படியே மாற்றம் அடைந்து, ஒரு வீரியம் மிக்க வைரஸாக மாற்றமடைந்து உயிர்க்கொல்லி நோயாக மாறியதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட 18 மாதங்கள் உலகை ஆட்டிப்படைத்த இந்த வைரஸின் மரபணுவில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்த ஜெனடிக் மியுடேஷன்ஸ்கள் காரணமாக (Antigen Shift and Antigen Drift ) தொடர்ந்து உருமாற்றம் அடைந்தது. பின்னர் ஒருக்கட்டத்தில் தனது பலத்தை அப்படியே இழந்து போனது.

எனவே 100 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா உருமாற்றம் அடைந்து வருகிறது.. அதன் ஆபத்து எப்போது முழுமையாக நீங்கும் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x