Wed, May12, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

10 கோடி ரூபாய் அபராத தொகையை செலுத்திய சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா சிறப்பு நீதிமன்றத்தில் அபராத தொகையை செலுத்தினார்.

10.10 கோடி ரூபாய்க்கான காசோலையை சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர், நீதிபதி சிவப்பா முன்னிலையில் செலுத்தினார்.

முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி அவர் உத்தேசமாக விடுதலையாக வாய்ப்பு உள்ளதாகவும் சசிகலா செலுத்த வேண்டிய அபராத தொகையை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறைவாசம் நீட்டிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் திகதி வரை தண்டனை அனுபவிக்க வேண்டும் அதன் பின்னர் விடுதலை செய்யப்படுவார் என கர்நாடக சிறைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது.

சிறைக் கைதிகளுக்கான நன்னடத்தை மற்றும் விடுமுறை காலம் உள்ளிட்ட சலுகைகளை பெற்று முன்கூட்டியே விடுதலை ஆவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனால் அவர் விரைவில் வெளியே வர வாய்ப்பு உள்ளதாகவும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தன்னுடைய அபராத தொகையை சசிகலா நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x