9 மணிநேரம் காரில் விடப்பட்ட குழந்தை மரணம்

நிறுத்திவைக்கப்பட்ட காருக்குள் குழந்தை சுமார் 9 மணிநேரம் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

9 மணிநேரம் காரில் விடப்பட்ட குழந்தை மரணம்

அமெரிக்காவின் வாஷிங்டன் (Washington) மாநிலத்தில் காரில் மறந்து விடப்பட்ட 1 வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.

நிறுத்திவைக்கப்பட்ட காருக்குள் குழந்தை சுமார் 9 மணிநேரம் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காலை 8 மணிக்கு வேலைக்குப் புறப்பட்டபோது குழந்தையின் வளர்ப்புத் தாய் காரை நிறுத்திவிட்டுச் சென்றார்.

மாலை 5 மணிக்கு வேலை முடிந்த பிறகுதான் குழந்தையை மறந்து காரில் விட்டுவந்ததை அவர் உணர்ந்தார்.

குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் அதனைக் காப்பாற்றமுடியவில்லை. அன்றைய வெப்பநிலை 70 டிகிரி செல்சியஸுக்கும் 75 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்டிருந்தது.

ஆனால் காருக்குள் வெப்பநிலை சுமார் 110 டிகிரி செல்சியஸாய் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. இவ்வாண்டு அமெரிக்காவில் அதீத வெப்பத்தால் பிள்ளைகள் உயிரிழந்த நான்காவது சம்பவம் இதுவாகும்.

வெப்பத்தால் அமெரிக்காவில் ஆண்டுதோறும் 15 வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் சராசரியாக 38 பேர்  உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW