அரசியல்இலங்கை

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (30) இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடி முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றை இணைத்து மீண்டும் ஒரு கூட்டணி அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தது.

இவ்வாறான கூட்டணி தொடர்பில் கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில் இந்த கடிதம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஆராயப்படலாம் என, தகவவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா அல்லது தனியான வேட்பாளரை களமிறக்குவதா என்பது தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையாமல் இருப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க நேற்று, தெரிவித்திருந்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பின்னடைய செய்வதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close