Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைவராக மீண்டும் மைத்திரிபால சிறிசேன நியமனம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் நியமிக்க, கட்சியின் நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக தயாசிறி ஜயசேகரவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு, கட்சித் தலைமையகத்தில் நேற்று கூடியது.

இந்த கூட்டத்திலேயே அவர்களை தலைவர் மற்றும் செயலாளராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்கள் மூவரும் அதே பதவியில் அங்கம் வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர மற்றும் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ ஆகியோர் குறித்த பதவிக்கு மீள பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் பொருளாளராக மீண்டும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு கட்சியின் தேசிய அமைப்பாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x