வேறொரு பெண்ணுடன் பழகியதால் காதலன் மீது ‘திராவகம் ’ வீசிய காதலி

திரிபுரா மாநிலம் கோவாய் அடுத்த பெல்சேரா கிராமத்தை சேர்ந்த சவுமென் சந்தல் (30) என்பவர் உடல் காயங்களுடன் அகர்தலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் ‘ஆசிட்’ (திராவகம்) தாக்குதலில் காயம் அடைந்து மூக்கு, கண் மற்றும் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அவரது சகோதரர், தனது அண்ணனின் (சவுமென் சந்தல்) பெண் தோழியான பினட்டா சந்தல் (27) என்பவர் திராவகம் வீசியதாக பொலிஸாரிடம் புகார் அளித்தார்.

பொலிஸார் பினட்டாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், ‘இருவரும் கடந்த 8 ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டாக சவுமென் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

இருவரும் பள்ளிப்பருவம் முதலே காதலித்து வந்த நிலையில், பிளஸ் 2 படித்த பின்பு மேற்படிப்பு படிக்க சிரமப்பட்ட சவுமென் சந்தலை இந்த பெண் படிக்க வைத்துள்ளார்.

8ம் வகுப்பு மட்டும் படித்த பினட்டா, பல இடங்களில் பாத்திரம் தேய்த்து, கூலி வேலை செய்து பணம் அனுப்பி காதலனை படிக்க வைத்தார். 2018ல் பட்டப்படிப்பை முடித்த சவுமென், வேலைக்கு சேர்ந்ததும் அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்.

அவர் வேறு ஒரு பெண்ணுடன் பழகுவதையும் அறிந்து ஆத்திரமடைந்த பினட்டா, தனது காதலன் மீது திராவகம் வீசினாள். தற்போது கைது செய்யப்பட்ட பினட்டா, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்’ என்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

பாலியல் வன்கொடுமை செய்து மூதாட்டி படுகொலை

Next Article

நாட்டில் மேலும் 414 கொரோனா தொற்றாளர்கள் பதிவு

Related Posts
Read More

டிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா? – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக…
Read More

36 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! ரெட் அலர்ட்

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த 36 மணி…
Read More

நிவர் புயல்; தற்காலிமாக தீர்ந்த நீர் தட்டுப்பாடு: அடுத்து என்ன?

நிவர் புயல் தாக்கத்தால் தமிழகத்தின் ஏராளமான ஏரிகள், குளங்கள், அணைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், வரும் கோடை காலத்தில் சென்னை மாநகரம் மற்றும் கடலூர்…
Total
2
Share