வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவுக்கு விஜயம்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவுக்கு நாளை (29) விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  அமெரிக்காவுக்கு விஜயம்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவுக்கு  நாளை (29)  விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்த விஜயத்தின் போது, ​​அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஆண்டனி பிளிங்கிங் மற்றும் அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாட உள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்படும்.