Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

வெளிநாடு செல்ல உதய கம்மன்பிலவுக்கு அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

போலி ஆவணங்களை பயன்படுத்தி அவுஸ்திரேலிய பிரஜையிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, உதய கம்மன்பில தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, பிரதிவாதிக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

எதிர்வரும் மாதம் 05ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரையிலும், 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலும் பிரித்தானியாவுக்கு செல்வதற்கு இதன்போது, அனுமதி கோரப்பட்டது.

இதன்போது, கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை தற்காலிகமாக நீக்கிக்கொள்ள சம்மதித்துள்ளது.

அத்துடன், நீதிமன்றத்தில் கட்டுப்பாட்டில் உள்ள அவரது கடவுச்சீட்டை விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெய்யன்துடுவ, இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

Latest news

Related news