வீடு திரும்பிய தந்தையும் மகளும் விபத்தில் பலி

மேலதிக வகுப்பு நிறைவடைந்ததன் பின்னர் மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

வீடு திரும்பிய தந்தையும் மகளும் விபத்தில் பலி

மீரிகம – பஸ்யால வீதியின் கொட்டகந்த பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

மீரிகமவிலிருந்து பஸ்யால நோக்கி பயணித்த காரொன்று மோதியதில் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

54 வயதான தந்தையும் 14 வயதான மகளுமே நேற்று(14) மாலை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலதிக வகுப்பு நிறைவடைந்ததன் பின்னர் மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

தப்பிச்சென்ற காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.