தலைப்புச் செய்திகள்பெட்டிக்கடைவெளிநாடு

விவாகரத்து பெற்று கோடீஸ்வரியான பெண்

உலகில் மிகவும் விலையுயர்ந்த விவாகரத்தாக அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் மற்றும் மெக்கென்சி பெசோஸ் விவாகரத்து காணப்படுகின்றது.

தனது பங்குகளில் 4 சதவீத பங்குகளை மெக்கன்சிக்கு வழங்கினார். அதன்மூலம் மெக்கென்சி இப்போது 48 பில்லியன் டொலர் சொத்துக்களைக் கொண்டு, உலகின் 4ஆவது பணக்கார பெண் ஆக உள்ளார்.

இதேபோல், சீனாவிலும் ஒரு விலை உயர்ந்த விவகாரத்து அண்மையில் நடைபெற்று உள்ளது.

சீனாவின் காங்டாய் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனத்தின் தலைவர் டு வீமின். இவரது மனைவி யுவான். இருவரும் பிரிந்து விட்டனர்.

தற்போது டு வீமின் தனது தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் 161.3 மில்லியன் பங்குகளை தனது முன்னாள் மனைவி யுவானுக்கு மாற்றியுள்ளார்.

இதன் மதிப்பு 320 கோடி அமெரிக்க டொலர் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து, மே 29 அன்று தாக்கல் செய்யப்பட்ட தகவலின்படி, யுவான் உலகின் பணக்காரர்களின் வரிசையில் சேர்ந்து உள்ளார்.

யுவான் சீனாவின் சர்வதேச வணிக மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார். 49 வயதான யுவான் தற்போது நேரடியாக பங்குகளை வைத்திருக்கிறார்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு தடுப்பூசியை உருவாக்கும் திட்டத்தை நிறுவனம் அறிவித்தபோது, காங்டாய் பங்குகள் கடந்த ஆண்டில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன.

டுவின் நிகர சொத்து மதிப்பு முன்னாள் மனைவிக்கு பங்குகளை கொடுப்பதற்கு முன்பு 650 கோடி டாலர்களாக இருந்தது. தற்போது அது சுமார் 301 கோடி டாலராக குறைந்துள்ளது.

Du Weimin , Divorce , டு வீமின் , விவாகரத்து

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close