விரைவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு - பிரசன்ன ரணதுங்க

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் அமைச்சு பதிவி கிடைக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு - பிரசன்ன ரணதுங்க

மேலும் சில அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் நடக்கும் என அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் அமைச்சு பதிவி கிடைக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 37 பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதி 30 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.