இலங்கைதலைப்புச் செய்திகள்

விபத்தில் தாய், 2 வயது குழந்தை படுகாயம்…15 வயது மகள் பலி!

நிகவரெடிய தலாகொலஹேன கந்தேகெதர வீதியின் கந்தேகெதர பகுதியில் இருந்து தலாகொலஹேன நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (18) மாலை 3.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான பெண் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற அவரது இரண்டு குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 15 வயதுடைய சிறுமி வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மற்றைய இருவரும் நிகவரெடிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் 2 வயது குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் நிகவரெடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: பீகார் காப்பகத்தின் திகில் கதை

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close