Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

விண்வெளியில் இடம்பெற்ற முதல் குற்றம்: நாசா விசாரணை

தனது முன்னாள் வாழ்க்கை துணையின் வங்கிக்கணக்கை, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதாக விண்வெளி வீரர் மீது புகார் எழுந்துள்ளது.

விண்ணில் நடந்ததாக கூறப்படும் இந்த முதல் குற்றச்சாட்டு குறித்து நாசா விசாரணை நடத்தி வருகிறது.

ஒரு பாலின ஜோடியான மெக்லைன் மற்றும் அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரி சம்மர் வொர்டன் இருவரும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், 2018 ல் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்நிலையில், சம்மர் வொர்டன், அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையத்திடம் அளித்த புகாரில், மெக்லைன், விண்வெளியில் இருந்து, வங்கி கணக்கை இயக்கியதாக புகார் அளித்துள்ளார்.

தற்போது பூமிக்கு திரும்பியுள்ள மெக்லைன், விண்ணில் இருந்து வங்கிக்கணக்கை இயக்கியதை ஒப்பு கொண்டதுடன், தாம் எந்த தவறும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன், சம்மர் வொர்டன் மற்றும் தனது மகனின் நிதி நிலைமை நன்றாக உள்ளதா என பரிசோதனை மட்டும் செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக நாசா அதிகாரிகள், இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விண்வெளியில், அமெரிக்கா, கனடா, ஜப்பான், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள்,அங்கு தங்கியிருந்து விண்வெளி ஆய்வில் ஈடுபடுகின்றனர்.

வீரர்கள், எந்த நாட்டை சேர்ந்தவர்களோ, அந்த நாடுகளின் சட்டம் அவர்களுக்கு பொருந்தும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்