Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

விஜய் சேதுபதியின் அடுத்த படம் காந்தி டாக்ஸ்

நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள படங்கள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

43 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி தெலுங்கில் வில்லனாக நடிக்கும் உப்பெனா படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அடுத்து விஜய் சேதுபதி நடிக்க உள்ள புதிய படமான காந்தி டாக்ஸ் படத்தின் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

மராட்டிய மொழிப் படங்களை இயக்கிய கிஷோர் பாண்டுரங்கன் இப்படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது.

சில நேரங்களில் மௌனம் தான் அதிகம் ஒலிக்கும்,எனது பிறந்தநாளை முன்னிட்டு,எனது அடுத்த படத்தின் போஸ்டரை வெளியிடுகிறேன்.ஒரு புதிய சவால் மற்றும் ஆரம்பம் எனக்காக தயாராக இருக்கிறது.உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும் என விஜய் சேதுபதி டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

காந்தி டாக்ஸ் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தி, மராத்தி என மொத்தம் 6 மொழிகளில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x