Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

விஜயத்தை நிறைவுசெய்து மாலைத்தீவு நோக்கி புறப்பட்டார் பொம்பியோ

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மாலைத்தீவை நோக்கி புறப்பட்டுச் சென்றார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்

நேற்று (27) இரவு இலங்கைக்கு வருகைத் தந்திருந்த மைக் பொம்பியோ, இன்று(28) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

பின்னர் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் பின்னர் செய்தியாளர் மாநாட்டிலும் கலந்துகொண்ட அவர், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கும் விஜயம் செய்தார்.

இந்த நிலையில், அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 1.06 மணியளவில் விசேட விமானத்தின் ஊடாக மாலைத்தீவை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x