விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழப்பு

விசாரணைக்காக அழைத்து சென்ற மகன் மற்றும் தந்தை உயிரிழந்த நிலையில், 4 பொலிஸார் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ், மரக்கடை நடத்தி வருகிறார்.

இவரது மகன் பென்னிக்ஸ் (31) செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 20ஆம் திகதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடை வைத்திருந்ததாக கூறி பொலிஸார் ஜெயராஜை திட்டியுள்ளனர்.

இதனால் பொலிஸாருக்கும் ஜெயராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை பார்த்த பென்னிக்ஸ் தனது தந்தையிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்த பொலிஸாரிடம் சமாதான பேச முயன்ற போது, அது கைகலப்பு வரையிலும் சென்றதாக கூறப்படுகிறது.

இதையெடுத்து, பொலிஸார் விதிமுறைகளை மீறி கடை வைத்திருந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் செய்து கைது செய்தனர். இதன் பின்னர் இருவரையும் 21ஆம் திகதி அதிகாலையில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.

நேற்று 22ஆம் திகதி இரவு திடீரென பென்னிக்ஸ் தனக்கு அதிமாக வியர்வை வருவதாக கூறியவாறு கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறை காவலர்கள், சிறைச்சாலைக்கு பின்புறமுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் பென்னிக்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

மகன் இறப்பு குறித்து கேட்ட ஜெயராஜுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இருவரின் இறப்புக்கு சாத்தான்குளம் பொலிஸார் தான் காரணம் என்றும், விசாரணையின் போது கடுமையாக தாக்கியுள்ளதாகவும், இதற்கு காரணமாக இருந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில், கோவில்பட்டி கிளை சிறையில் பணியில் ஈடுபட்டு வந்த இரு காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட 4 பொலிஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
டென்னிஸ் வீரர்,ஜோகோவிச்,கொரோனா

டென்னிஸ் வீரர் ஜோகோவிச்க்கு கொரோனா

Next Article
குணமடைந்தவர்கள்

இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு

Related Posts
Read More

விவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
Read More

கொரோனா மருத்துவமனை தீ விபத்து; 3 டாக்டர்கள் கைது

குஜராத்தில் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் கடந்த 27ஆம் திகதி…
Read More

டிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா? – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக…
Total
3
Share