வாள் தாக்குதலில் மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

தாக்குதலில் காயமடைந்த தாய், மகள் மற்றும் இரு மகன்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மூன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாள் தாக்குதலில் மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

வாள் தாக்குதல்:

மாத்தளை – ரபிமகம பகுதில் ஒருவர் வாளால் தாக்கியதில் மூன்றரை வயது ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. 

அங்குள்ள வீடொன்றில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை, அயல் வீட்டுக்காரர் ஒருவர் வாளால் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த தாய், மகள் மற்றும் இரு மகன்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மூன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

38 வயதான தாயும் 19 வயது மகளும் 15 வயது மகனும் மாத்தளை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறினர்.

இரு குடும்பங்களுக்கு இடையில் நீண்ட காலமாக இருந்துவந்த தனிப்பட்ட தகராறே இந்த கொலைச் சம்பவத்திற்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.