வளர்ப்பு மகளை 20 நாட்களாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தை!

0

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள சுந்தர்கர் மாவட்டத்தில் நபர் ஒருவர் தனது வளர்ப்பு மகளை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த சிறுமிக்கு ஒரு வயது இருக்கும் போது தந்தை இறந்துவிட்ட நிலையில், தாய் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சிறுமியை தன்னுடன் அழைத்து செல்லாத தாய், அவரது அத்தையின் பராமரிப்பில் விட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில், அத்தையின் கணவரான கிஷோர் மதுபோதையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும், சிறுமியை தொடர்ந்து மூன்று வாரத்திற்கும் மேலாக சித்ரவதை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

வலி தாங்க இயலாத சிறுமி, காமுகனின் கொடூரத்தால் பல உடல் வேதனையையும் அனுபவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து சிறுமி தனது அத்தையிடம் தெரிவிக்கவே, இந்த விஷயம் தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் அத்தை புகார் அளித்துள்ளார்.

வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காமுகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x