ஆன்மீகம்இலங்கைதலைப்புச் செய்திகள்வடக்கு - கிழக்கு

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய உற்சவம் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம், இன்று (8) அதிகாலை மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு ஆரம்பமானது

கடந்த 01ஆம் திகதி உப்பு நீரில் விளக்கெரிப்பதற்காக முல்லைத்தீவு சிலாவத்தை கடற்கரையில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கடந்த ஏழு நாட்களாக முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் விளக்ககெரிக்கப்பட்டு வரும் அற்புத காட்சி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று (07) காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்று இன்று (08) அதிகாலை அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் ஆரம்பமாகியுள்ளது

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆலயத்தை சூழ இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதோடு நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், வீதித் தடைகள் போடப்பட்டு ஆலயத்திற்கு வருபவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இருப்பினும் ஆலயத்துக்கு வருகைதந்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு மக்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

சண்முகம் தவசீலன்

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close