வரவு - செலவுத் திட்டம் 2023: வாக்கெடுப்பு இன்று

பாராளுமன்றத்தில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22) நடாத்தப்படவுள்ளது.

வரவு - செலவுத் திட்டம் 2023: வாக்கெடுப்பு இன்று

பாராளுமன்றத்தில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22) நடாத்தப்படவுள்ளது.

இதன்படி, இந்த வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்க பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், வரவு -  செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் மத்திய செயற்குழு நேற்றைய தினம் கூடிய போதே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, வரவு -  செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.