வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று 26.01.2020

வரலாற்றில் இன்று 26.01.2020

ஜனவரி 26 கிரிகோரியன் ஆண்டின் 26 ஆம் நாள். ஆண்டு முடிவுக்கு மேலும் 339 (நெட்டாண்டுகளில் 340) நாள்கள் உள்ளன.

வரலாற்றில் இன்று 26.01.2020 | நிகழ்வுகள்

1340 – இங்கிலாந்து மன்னன் மூன்றாம் எட்வர்ட் பிரான்சின் மன்னனாக அறிவிக்கப்பட்டான்.

1500 – விசெண்ட் யானெஸ் பின்சோன் பிரேசில் நாட்டில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்ர்.

1531 – போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1565 – கர்நாடகா மாநிலத்தின் தலைக்கோட்டை என்ற இடத்தில் விஜயநகரப் பேரரசுக்கும் இஸ்லாமிய தக்காணத்து சுல்தான்களுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும் பகுதி இஸ்லாமியரின் கட்டுப்பாட்டுக்குள் வரக் காரணியாய் இருந்தது.

1788 – ஆர்தர் பிலிப் தலைமையில் பிரித்தானியக் கைதிகளின் முதலாவது தொகுதியைக் கொண்ட கப்பல் சிட்னியை அடைந்து புதிய குடியேற்றத்தை ஆரம்பித்தனர். இது ஆஸ்திரேலிய நாளாகக் கொண்டாடப்படுகின்றது.

1837 – மிச்சிகன் ஐக்கிய அமெரிக்காவின் 26வது மாநிலமாக இணைக்கப்பட்டது.

1841 – ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கை அதிகாரபூர்வமாக ஆக்கிரமித்தது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.

1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது.

1924 – சென் பீட்டர்ஸ்பேர்க் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.

1926 – ஜோன் லோகி பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்சிப்படுத்தினார்.

1930 – இந்திய தேசியக் காங்கிரஸ் 26 ஜனவரியை இந்தியாவின் விடுதலை நாளாக (பூரண சுயராஜ்ய நாள்) அறிவித்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படையினர் முதற்தடவையாக ஐரோப்பாவை (வட அயர்லாந்து) அடைந்தனர்.

1949 – ஆஸ்திரேலியக் குடியுரிமை முதன் முறையாக வழங்கப்பட்டது.

1950 – இந்தியா குடியரசு நாடானது. ராஜேந்திர பிரசாத் அதன் முதலாவது குடியரசுத் தலைவரானார்.

1952 – பிரித்தானிய மற்றும் எகிப்திய உயர் வகுப்பு வர்த்தகர்களுக்கெதிராக எகிப்தில் இடம்பெற்ற வன்முறைகளில் கெய்ரோ நகரத்தின் நடுப் பகுதி தீயினால் சேதமாக்கப்பட்டது.

1958 – ஜப்பானிய பயணிகள் கப்பல் தெற்கு அவாஜி தீவில் மூழ்கியதில் 167 பேர் கொல்லப்பட்டனர்.

1962 – ரேஞ்சர் 3 விண்கலம் சந்திரனை ஆராய்வதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது. ஆனாலும் இத் தளவுளவி 22,000 மைல்களால் சந்திரனைத் தவறவிட்டது.

1965 – இந்தி இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது.

1980 – இஸ்ரேலும் எகிப்தும் தூதரக உறவை ஆரம்பித்தன.

1983 – லோட்டஸ் 1-2-3 வெளியிடப்பட்டது.

1992 – ரஷ்யாவின் அணுவாயுத ஏவுகணைகள் ஐக்கிய அமெரிக்க நகரங்களை நோக்கி செலுத்தப்படமாட்டா என அதிபர் பொரிஸ் யெல்ட்சின் அறிவித்தார்.

2001 – குஜராத் நிலநடுக்கத்தில் 20,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

2006 – வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் தொலைத்தந்தி மூலமான தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.

வரலாற்றில் இன்று 26.01.2020 | பிறப்புகள்

1763 – காருல் யோவான், சுவீடன், நோர்வே மன்னர் (இ. 1844)

1878 – டேவ் நோர்ஸ், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (இ. 1948)

1921 – அக்கியோ மொறிட்டா, சப்பானியத் தொழிலதிபர், சோனி நிறுவனர் (இ. 1999)

1958 – எல்லேன் டிஜெனிரெஸ், அமெரிக்க நடிகை

1968 – ரவி தேஜா, இந்திய நடிகர்

1977 – வின்ஸ் கார்டர், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

2008 – பால் ஆக்டோபஸ், ஆங்கிலேய சாக்குக்கணவாய் (இ. 2010)

வரலாற்றில் இன்று 26.01.2020 | இறப்புகள்

1823 – எட்வர்ட் ஜென்னர், ஆங்கிலேய மருத்துவர், அம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர் (பி. 1749)

1891 – நிக்கோலஸ் ஓட்டோ, செருமானியப் பொறியியலாளர், உள் எரி பொறி கண்டுபிடித்தவர் (பி. 1833)

1895 – கெய்லி, கணிதவியலர் (பி. 1821)

1961 – ஸடான் நிக்கொலஸ், ஆங்கிலேயெத் துடுப்பாளர் (பி. 1900)

1964 – தோமஸ் அடிகள், யாழ்ப்பாணம் தோலகட்டி ஆசிரம சுவாமிகள் (பி. 1886)

1990 – லூயிசு மம்ஃபோர்டு, அமெரிக்க வரலாற்றாளர் (பி. 1895)

2008 – ஜோர்ஜ் ஹப்பாஷ், பாலஸ்தீனத் தலைவர் (பி. 1926)

2015 – ஆர். கே. லட்சுமண், கேலிச் சித்திர ஓவியர் (பி. 1921)

வரலாற்றில் இன்று 26.01.2020 | சிறப்பு நாள்

உலக சுங்கத்துறை தினம்
ஆஸ்திரேலியா – ஆஸ்திரேலியா நாள் (1788)
இந்தியா – குடியரசு நாள் (1950)
உகாண்டா – விடுதலை நாள்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
DAILY HOROSCOPE 18th november, இன்றைய ராசிபலன் 2019 ஒக்டோபர் 15, Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 26.01.2020

Next Article
கோவை

திடீரென பற்றி எரிந்த சொகுசு பேருந்து..! பெரும் சோகம்..

Related Posts
வரலாற்றில் இன்று
Read More

வரலாற்றில் இன்று 22.08.2020

வரலாற்றில் இன்று 22.08.2020 ஆகஸ்டு 22 (August 22) கிரிகோரியன் ஆண்டின் 234 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 235 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு…
வரலாற்றில் இன்று
Read More

வரலாற்றில் இன்று 04.05.2020

வரலாற்றில் இன்று 04.05.2020 | நிகழ்வுகள் 1493 – திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை ஸ்பெயினுக்கும் போர்த்துக்கல்லுக்கும் பிரித்துக் கொடுத்தார். 1494 –…
வரலாற்றில் இன்று
Read More

வரலாற்றில் இன்று 01.05.2020

வரலாற்றில் இன்று 01.05.2020 | நிகழ்வுகள் 305 – தியோக்கிளேத்தியனும், மாக்சிமியனும் உரோமைப் பேரரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றனர். 524 – பர்கண்டி…
வரலாற்றில் இன்று
Read More

வரலாற்றில் இன்று 29.04.2020

வரலாற்றில் இன்று 29.04.2020 | நிகழ்வுகள் 1672 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டான். 1770 – ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின்…
Total
2
Share