Tue, Jan26, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜங் உன் மரணம்? அதிர்ச்சி தகவல்

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜங் உன் மரணம் அடைந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த, 2011ல் வட கொரிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற, கிம் ஜங் உன், 36, கடந்த சில மாதங்களாக, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு, ‘கோமா’வில் உள்ளதாக, தகவல் வெளியானது.

இதை, தென்கொரியாவின் மறைந்த ஜனாதிபதி கிம் டே ஜங்கின், முன்னாள் உதவியாளர் ஒருவரும் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், சில நிகழ்ச்சிகளில் கிம் ஜங் உன் பங்கேற்றது போன்ற படங்கள் வெளியானதை அடுத்து, குழப்பம் நீடித்தது.

இந்நிலையில், வட கொரியாவில் பத்திரிகையாளர் என்ற முறையில், பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ள, ராய் காலி என்பவர், கிம் ஜங் உன், மரணம் அடைந்து விட்டதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: வட கொரியாவில் என்ன நடக்கிறது என்பது, அந்நாட்டு மக்களுக்கே தெரியாது. அந்த அளவிற்கு அரசு, ரகசியங்களை காப்பாற்றுகிறது. எனக்கு தெரிந்தவரை, சில காலம் உடல் நலமின்றி இருந்த, கிம் ஜங் உன் மரணம் அடைந்து விட்டார்.

வட கொரியாவில் வழக்கமாக, ஒரு ஜனாதிபதி உடல் நிலை பாதித்தாலோ அல்லது நிர்வாகத்தை நடத்த முடியாத சூழல் ஏற்படும் போதுதான், அதிகாரத்தை அடுத்தவர் கைக்கு மாற்றுவர்.

கிம் ஜங் உன், தன் அதிகாரங்களில் சிலவற்றை சகோதரிக்கு மாற்றியதில் இருந்து, அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது ஊர்ஜிதமானது. தற்போது, அவர் மரணம் அடைந்து விட்டதாகவே கருதுகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்