இலங்கை

வடக்கு – கிழக்கு மாகாணசபைகள் செயலிழந்துள்ளமை துரதிருஷ்டவசமானது – டளஸ்

இந்த வருட இறுதிக்குள் அனைத்து மாகாண சபைகளின்  பதவிகாலமும் நிறைவடையும் நிலையில், நாட்டில் தற்போது மாகாண சபைகள் இல்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு – கிழக்கு மக்களுக்காக உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் இன்று அங்கு செயற்பாட்டில் இல்லாமை அரசியல் துரதிருஷ்டம் என்றும் அவர் கூறினார்.

எனினும், இவ்வாறான ஒரு நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் உறுப்பினர்கள் நாடாளுமன்றில் குரலெழுப்புவதில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு உரையாற்றுகையில், “உரிய காலத்தில் நடத்தாமல் தாமதப்படுத்துவது நாட்டின் அரசியலுக்கு ஆரோக்கியமான விடயம் அல்ல. இதன் காரணமாக பாரததுரமான மேசமான விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஜனநாயகம் தொடர்பில் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், மக்களின் வாக்குரிமையை வழங்காமல் பறிப்பது பாரதூரமான அரசியல் ஆபத்தாகும்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு இணக்கம் வெளியிட்டன. கடந்த வருடம் நவம்பர் மாதம் பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளன. அதன்படி மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நாடாளுமன்றம் அவதானம் செலுத்த வேண்டும்” என்றார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close