லயன் குடியிருப்பில் 4 வீடுகள் தீக்கிரை

பதுளை – லுணுகலை, சுவிண்டன் பகுதியிலுள்ள லயன் குடியிருப்பொன்றில் நேற்று(13) மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 04 வீடுகள் சேதமடைந்துள்ளன.

லயன் குடியிருப்பில் 4 வீடுகள் தீக்கிரை

பதுளை – லுணுகலை, சுவிண்டன் பகுதியிலுள்ள லயன் குடியிருப்பொன்றில் நேற்று(13) மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 04 வீடுகள் சேதமடைந்துள்ளன. 

நேற்று(13) மாலை 6.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 03 வீடுகளிலுள்ள தளபாடங்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், மற்றுமொரு வீட்டின் கூரை சேதமடைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை.

இந்நிலையில் விளக்கின் மூலம் தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவம் தொடர்பில் லுணுகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.