Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

லங்கா பிரீமியர் லீக்: முதல் வெற்றியை ருசித்தது கண்டி அணி

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஆறாவது போட்டியில் கண்டி டர்கேர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

காலி கிளாடியேற்றர்ஸ் அணியுடனானா இந்தப் போட்டி, ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற காலி அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

முதலில் களமிறங்கிய கண்டி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஐந்த விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக, டெய்லர் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 49 ஓட்டங்களையும், கமின்டு மென்டிஸ் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில், சன்டகன் இரண்டு விக்கெட்டுகளையும், தனஞ்சய, அமிர் மற்றும் மொஹம்மட் சிராஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், பதிலுக்கு 197 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய காலி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனால் 25 ஓட்டங்களால்தோல்வியடைந்தது.

காலி அணி சார்பாக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஸ்க குணதிலக அதிகபட்சமான 82 ஓட்டங்களைப் பெற்றார். இப்போட்டியின் ஆட்டநாயகனாக பிரென்டன் டெய்லர் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை, லங்கா பிரீமியர் லீக் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள கண்டி அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

அத்துடன், காலி அணி மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news