Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

ரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி! பரபரப்பான பிக் பாஸ்

பிக் பாஸ் 4வது சீசன் துவங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதில் போட்டியாளராக வந்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை தினம்தோறும் உருவாக்கி வருகிறார்கள்.

முதல் நாளில் தொடங்கிய அனிதா சம்பத் – சுரேஷ் சக்ரவர்த்தி சண்டை மற்றும் நேற்று முன்தினம் முதல் நடந்து வரும் சனம் – பாலாஜி முருகதாஸ் சண்டை என அனைத்தும் ரசிகர்களை பரபரப்பாக வைத்திருக்கிறது.

இந்நிலையில் இரண்டாவது வாரத்தின் பிக் பாஸ் தலைவராக சுரேஷ் சக்ரவர்த்தி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் சும்மா இருந்தாலே பல பிரச்சனைகள் வரும், இப்போது தலைவர் ஆகிவிட்டார் என்றால் சொல்லவா வேண்டும்.. என்னவெல்லாம் நடக்குமோ என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களால் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று வெளிவந்திருக்கும் ப்ரொமோ வீடியோவில் சுரேஷ் சக்ரவர்த்தி கூறிய ஒரு விஷயம் நடிகர் ரியோவை கடும் கோபமடைய வைத்திருக்கிறது.

யார் யாரெல்லாம் மாஸ்க் போட்டுட்டு இருக்காங்க என பாலாஜி முருகதாஸ் ஒரு கேள்வியை சுரேஷ் சக்ரவர்த்தியிடம் கேட்கிறார்.

அதற்கு பதில் சொன்ன சுரேஷ் நடிகர் ரியோவை கைகாட்டி பேச துவங்குகிறார். அதனால் கோபமான ரியோ, “அவர் கேட்ட கேள்விக்கு என்னை எடுத்துக்காட்டாக சொல்லாதீர்கள்.. சொல்லாதீங்க” என கூறி கோபத்துடன் பேசியிருக்கிறார்.

“நான் மறைக்க நினைக்கும் முகம் இதுதான். ஓகே. நீங்கள் யாரை வேண்டுமானாலும் example ஆக எடுத்துக்கொள்ளுங்கள். என்னை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றும் அவர் கூறி இருக்கிறார்.

இதனால் இது தான் இன்று பிக் பாஸ் வீட்டில் பெரிய பிரச்சனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்