ராமர் கோவிலுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் மோடி

அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 161 அடி உயரத்தில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நாளை நடைபெறுவதையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அயோத்தி நகரமே களை கட்டி உள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்கள் விழாவில் பங்கேற்பதால், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. திரும்பிய திசை யெங்கும் பிரதமர் நரேந்திர மோடியின் உருவம் பொறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, ஆங்காங்கே பாஜக கொடிகள் கட்டப்பட்டு உள்ளன.

மிகவும் சிறப்பான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த விழா நேற்று காலையில் கவுரி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக, வேத பண்டிதர்கள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் சிலரை தவிர வேறு யாரும் இந்த சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இதைப்போல கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விழாவுக்கு அழைப்பாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, நாளை பூமி பூஜை நடக்கும் நிகழ்ச்சியின் போது மேடையில் பிரதமர் மோடியுடன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தபிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் ஆகியோர் மேடையில் இருப்பார்கள்.

பகல் 12 மணிக்கு ராம் லல்லா விராஜ்மன் என்ற குழந்தை ராமர் வழிபாடு மற்றும் பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அங்கு பாரிஜாதம் மரக்கன்று ஒன்றை நடும் பிரதமர், 12. 30 மணிக்கு விழா நடைபெறும் இடத்தை சென்றடைகிறார்.

மொத்தம் 3 மணி நேரத்திற்கும் மேலாக, பிரதமர் நரேந்திரமோடி, வரலாற்று சிறப்பு வாய்ந்த அயோத்தி ராமர் கோவில் விழாவுக்காக ஒதுக்கி இருக்கிறார்.

பூமி பூஜைக்கான அழைப்பிதழில் பாதுகாப்பு கோடு அச்சிடப்பட்டுள்ளது. அழைப்பிதழுடன் விழாவுக்கு வருபவர்கள் வெளியே சென்றால் மீண்டும் உள்ளே வர இயலாத வகையில் பாதுகாப்பு கோடு உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
4
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
காலநிலை

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

Next Article
WHO,கொரோனா மருந்து, உலக சுகாதார அமைப்பு,

"கொரோனாவிற்கு சரியான மருந்து கிடைக்காமலும் போகலாம்"- WHO எச்சரிக்கை

Related Posts
Read More

விவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
Read More

கொரோனா மருத்துவமனை தீ விபத்து; 3 டாக்டர்கள் கைது

குஜராத்தில் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் கடந்த 27ஆம் திகதி…
இன்றைய ராசி பலன்கள்
Read More

இந்த ராசிக்காரர்கள் இன்று சிக்கனமாக செலவு செய்வது நல்லது!

ஒவ்வொரு நாளும் ஏற்படக்கூடிய நல்லது கெட்டதுகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அதற்கேற்க அவற்றை சுலபமாக கையாளலாம் அல்லவா? அதற்காக தான் ராசிபலன் உதவுகிறது. டிசம்பர்…
Total
4
Share