ராணி எலிசபெத்தின் உடல் இன்று அடக்கம்.. சவப்பெட்டியின் சிறப்புகள் என்ன?

பிரத்யேக சவப்பெட்டியில் வைத்து பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ராணி எலிசபெத்தின் உடல் இன்று அடக்கம்.. சவப்பெட்டியின் சிறப்புகள் என்ன?

பிரிட்டனின் நீண்ட கால ராணியாக முடிசூட்டிக் கொண்டிருந்த இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்குகள் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இன்று நடைபெறுகிறது. ராணியின் உடலுக்கு இறிதி சடங்குகள் நடந்த பிறகு ஒரு வாரத்திற்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அரசர் பிலிப் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த சில மாதங்களாக வயோதிக பிரச்சினைகளால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கோடைக்காக ஸ்காட்லாந்தில் உள்ள பாரோமல் அரண்மனைக்கு சென்றிருந்தார்.

அங்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அரண்மனையின் அதிகாரப்பூர்வ மருத்துவர்கள் ராணியின் உடல்நிலையை 24 மணி நேரமும் கண்காணித்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் அவர் கடந்த 8ஆம் தேதி இரவு ஸ்காட்லாந்தில் காலமானார். இதைத் தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டன் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். ஸ்காட்லாந்தில் இருந்த அவரது உடலுக்கு அரசு குடும்பத்தின் வழக்கபடி சடங்குகள் செய்யப்பட்டன. 

பிரத்யேக சவப்பெட்டியில் வைத்து பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதையடுத்து இன்றைய தினம் ராணியின் இறுதி சடங்கிற்காக அவரது உடல் வெலிங்டன் ஆர்ச்சிற்கு கொண்டு செல்லப்படும். அங்குள்ள அலங்கரிக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டு வாகனம் மூலம் வின்ட்ஸ்சர் கேஸ்டிலுக்கு கொண்டு செல்லப்படும். அங்குள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ராணிக்கு நடத்தப்படும் இறுதிச் சடங்குகள் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும்.

ராணியின் இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், துருக்கி அதிபர் ரிசெப் தயீப் எர்டோகன், ஜப்பான் அரசு நரூஹிட்டோ, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், ஐரோப்பியாவின் உருசுலா வான் டெர் லேயன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். 

உக்ரைன் போரால் பிரிட்டனுக்கும் ரஷ்யாவுக்கு சுமூக உறவு இல்லாததால் இந்த சடங்கில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொள்ளவில்லை. ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குகள் இன்றைய தினம் இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகின்றன. இந்த சடங்குகள் சரியாக 1 மணி நேரம் நீடிக்கும் என தெரிகிறது.

இன்றைய தினம் மாலை ராணியின் உடல் அவரது கணவரும் இளவரசர் பிலிப்பின் உடலுடன் நல்லடக்கம் செய்யப்படும். இந்த நிகழ்வில் ராணியின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இருப்பர். 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயிரிழந்த ராணியின் கணவர் பிலிப்பின் உடல் செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ராயல் பெட்டகத்தில் அப்படியே வைக்கப்பட்டுள்ளது.

தற்போது ராணியின் இறுதி சடங்குகளையொட்டி பிலிப்பின் உடல் எலிசபெத் உடலுக்கு அருகே கொண்டு செல்லப்பட்டது. ராணியின் தந்தை 6ஆம் ஜார்ஜ், தாய் எலிசபெத் ஆகியோரின் உடலுடன் இரண்டாம் எலிசபெத்தின் உடலும் அவருக்கு அருகே பிலிப்பின் உடலும் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். 
ராணியின் தனது தாய், தந்தை, கணவர், 2002 ஆம் ஆண்டு இறந்த சகோதரி மார்க்ரட் ஆகியோருடன் இளைபாருவார்.

வெஸ்மின்ஸ்டர் அபேயில்தான் 1066 ஆம் ஆண்டு முதல் அரச குடும்பத்தினர் முடிசூட்டிக் கொள்கிறார்கள். இந்த இடத்தில் இதுவரை ராஜ குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு இறுதி காலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் இடமாகும். 

இந்த இடத்தில்தான் ராணி இரண்டாம் எலிசபெத்தும் 1952 இல் முடிசூட்டிக் கொண்டார். இங்கு திருமணம் செய்யும் இடமும் உள்ளது. இதுவரை அரசு குடும்பத்தின் 16 திருமணங்கள் இங்கு நடந்துள்ளன, ராணி எலிசபெத்திற்கும் பிலிப்பிற்கும் இங்குதான் 1947 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

சவப்பெட்டி எப்படிப்பட்டது

ராணிக்காக செய்யப்பட்டுள்ள சவப்பெட்டி ஓக் மரத்திலால் ஆனது. இது 30 ஆண்டுகளுக்கு முன்னரே வடிவமைக்கப்பட்டது. இதில் காரியம் கோட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த காரியம் இறந்தவர்களின் உடலை பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது. 

டைட்டாக மூடப்படும் சவப்பெட்டியில் ஈரப்பதம் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது. இதே பாணிதான் இளவரசர் பிலிப்பின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியிலும் பின்பற்றப்பட்டுள்ளது. அந்த சவப்பெட்டியில் ராணியின் தனிப்பட்ட கொடி, ராணியின் கிரீடத்தில் சிலுவை பொருத்தப்படட வட்டமான உருண்டை, செங்கோல் ஆகியவையும் வைக்கப்படும். 

இந்த உருண்டையானது ராணி முடிசூட்டி கொண்ட போது கொடுக்கப்பட்டது. இது 300 ஆண்டுகள் பழமையானது. ராணிக்கான அதிகாரமானது கடவுளிடம் இருந்து பெறப்பட்டது என்பதை அந்த உருண்டையில் உள்ள சிலுவை நினைவுப்படுத்தும். கோஹினூர் வைரம் உள்ள ராணியின் கிரீடத்தை சார்லஜின் மனைவி கமீலா அணிந்து கொள்வார்.