ராகவா லாரன்ஸ் - SJசூர்யா இணையும் புது படம்... அதிரடியான டீசர்

திருநாவுக்கரசு ஒளிப்பதிவில் ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பு செய்யும் ஜிகர்தண்டா DOUBLEX படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசை அமைகிறார். 

அடுத்ததாக ஜிகர்தண்டா 2 திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.

முன்னதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், குரு சோமசுந்தரம், லட்சுமி மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படம் பிளாக் காமெடி கேங்ஸ்டர் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

இதனிடையே சமீபத்தில் ஜிகர்தண்டா திரைப்படத்தின் பார்ட்2 ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வருவதாக கார்த்திக் சுப்பராஜ் அறிவித்திருந்தார். நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ஜிகர்தண்டா பார்ட்2 படத்திற்கு ஜிகர்தண்டா DOUBLEX என பெயரிடப்பட்டுள்ளது. 

இப்படத்தை தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் அவர்களின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

திருநாவுக்கரசு ஒளிப்பதிவில் ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பு செய்யும் ஜிகர்தண்டா DOUBLEX படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசை அமைகிறார். 

ஜிகர்தண்டா DOUBLEX திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது  தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதனை அறிவிக்கும் வகையில் அசத்தலான அறிவிப்பு டீசர் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.