களனி வனவாசல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரயில் குறுக்கு வீதியில் முச்சக்கரவண்டியொன்று ரயிலில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மற்றும் இருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இந்த விபத்து அதிகாலை 5.40 மணியளவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹட்டன் பகுதியைச் சேர்ந்த சிலரே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதுடன், உயிரிழந்தவரி்ன் சடலம் மருதானை ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.