ரத்மலானை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ரத்மலானை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மலானை, சில்வா மாவத்தை பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்குள் நுழைந்த இருவர் வீட்டில் இருந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

30 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர்களை கைது செய்ய கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.