Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

‘ரணில் விக்கிரமசிங்க பொய்யுரைக்கின்றார்’

அமெரிக்கவுடன் எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திடுவது குறித்து அரசாங்கம் எந்தவித இணக்கமும் எட்டவில்லை. அரசாங்கம் ஆரம்பத்தில் கூறிய நிலைப்பாட்டில் இப்போதும் உள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், ரணில் விக்கிரமசிங்க பொய்யுரைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் இறுதி அமைச்சரவை கூட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில் எம்.சி.சியை கைச்சாத்திட அரசாங்கம் இணங்கியுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க நேற்று தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க கூறிய கருத்தின் உண்மைத்தன்மை என்னவென்று கேள்வி எழுப்பியபோது பந்துல குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “அது பொய். அவ்வாறு எந்தவித உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை. நாட்டின் இறைமைக்கும் நாட்டின் சட்டத்திற்கும் முரணான விதத்தில் செயற்படும் எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்காது.

இப்போது தேர்தல் காலத்தில் ஒவ்வொரு பொய்களை கூறிக்கொண்டு அரசாங்கத்தில் வீழ்த்த முயற்சிக்கும் முயற்சியே இவையெல்லாம். ஆனால் இதில் உண்மைத்தன்மை எதுவும் இல்லை” என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்