Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

ரசிகர்களை ஏமாற்றிய ஜேம்ஸ் பாண்ட்

ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன.

25-வது ஜேம்ஸ் பாண்ட் படமாக ‘நோ டைம் டூ டை’ தயாராகி உள்ளது. இதில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடித்துள்ளார்.

இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று அறிவித்து கொரோனா பரவலால் பல தடவை தள்ளிப்போனது.

இந்த நிலையில் சமீபத்தில் வருகிற ஏப்ரல் மாதம் நோ டைம் டூ டை படம் வெளியாகும் என்று அறிவித்தனர். இது ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது படம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஜேம்ஸ் பாண்ட் படம் ஏப்ரல் மாதத்துக்கு பதிலாக வருகிற அக்டோபர் மாதம் ‘நோ டைம் டூ டை’ படம் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இது ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியானது. இதனை தயாரிப்பு தரப்பில் மறுத்தனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x