ரசாயனத் தொழிற்சாலையில் தீ : 4 பேர் வைத்தியசாலையில்

0

ஜூரோங்கிலுள்ள ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த ஊழியர் நால்வர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

ஆயர் மெராபூ ரோட்டில் (Ayer Merbau Road) அமைந்துள்ள பிளாஸ்டிக், ரப்பர் பொருள்களைத் தயாரிக்கும் Mitsui Elastomers Singapore தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் தீ மூண்டது.

அதனையடுத்து, சுமார் 50 தீயணைப்பாளர்களும், 15 தீயணைப்பு வண்டிகளும் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலை 4 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். தீ மூண்டதற்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x