Tue, Jan26, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

யோகா பயில வந்த அமெரிக்க பெண்ணிற்கு பாலியல் தொல்லை!

அமெரிக்காவைச் சேர்ந்த 37 வயதான பெண்மணி ஒருவர், யோகா கற்றுக் கொள்வதற்காக இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகருக்கு வந்து உள்ளார்.

ரிஷிகேஷ் நகரில் ஒரு வீட்டில் தங்கி இருந்து யோகா கற்றுக்கொண்டு அவர் வந்தார். அப்போது, யோகா பயிற்சி தெரிந்த உள்ளூரைச் சேர்ந்த ஒருவர், அந்த அமெரிக்க பெண்ணிடம் நட்பாகப் பேசி பழகி வந்துள்ளார்.

இந்த நட்பின் பழக்கத்தால், அந்த அமெரிக்க பெண்ணை தன் வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு தொடர்ந்து அவர் அழைத்துக்கொண்டு இருந்து உள்ளார்.

ஆனால், அந்த பெண்ணுக்கு ஏதோ ஒரு வித தயக்கம் இருந்ததால், அந்த அமெரிக்க பெண், அந்த நபரின் வீட்டிற்கு விருந்துக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 5 ஆம் திகதி அமெரிக்க பெண் தங்கியிருந்த வீட்டு பால்கனி வழியாக அந் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த அந்த நபர், வீட்டில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்த அந்த பெண்மணியை பாலியல் தொல்லை கொடுத்து, பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அவரிடமிருந்து விடுபட்டு, அவரை சத்தம் போட்டு விரட்டி உள்ளார். இதனால், அந்த நபரும் அங்கிருந்து வேகமாகச் சென்று விட்டார். இதனையடுத்து, அங்குள்ள காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண், அந்த நபர் மீது புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த நபர் அந்த பெண்ணின் வீட்டிற்குள் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், “எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் தந்தை, தன் மகன் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று, எனக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும்” பாதிக்கப்பட்ட அமெரிக்க பெண் கூறியுள்ளார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்