யாழ். வைத்தியசாலையில் அடையாளம் தெரியாத சடலங்கள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், அடையாளம் தெரியாத ஆண் மற்றும் பெண்னொருவரின் சடலம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். வைத்தியசாலையில் அடையாளம் தெரியாத சடலங்கள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், அடையாளம் தெரியாத ஆண் மற்றும் பெண்னொருவரின் சடலம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சடலங்களை அடையாளம் காண உதவுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருவடி நிலை கடற்கரையில் கடந்த ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி கரையொதுங்கிய ஆணொருவரின் சடலம் யாழ். போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

அதேபோல, யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டு, பொலிஸாரினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.