யாழ்ப்பாணம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் அங்குள் வர்த்தக நிலையங்களில் பெருமளவான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
யாழ். மற்றும் நல்லூர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குள் நேற்று இரவு 8 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள் வாள்களை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இலக்கத்தகடுகள் அற்ற மூன்று மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்தவாறு வந்த ஆறு பேர் கொண்ட குழுவினரே இந்த கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த குழுவினர் கோண்டாவில் பகுதியில் வீதியில் சென்ற இருவரின் தங்க ஆபரணங்களையும் அறுத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.