மெரினா புரட்சிக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்

‘பசங்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ்.

இதனையடுத்து ‘வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு’ போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

இதில் 5 படங்களை அவரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். தற்போது, ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் புதிய படத்தை தயாரித்து வருகிறார். அந்தப் படத்திற்கு ‘மெரினா புரட்சி’ என தலைப்பு சூட்டியுள்ளனர்.

கடந்த வருடம் இதே நாளில் (ஜனவரி 8-ஆம் தேதி) ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மெரினாவில் தொடங்கி நடைபெற்ற போராட்டத்தை மைய்யப்படுத்திய திரைப்படமாம்.

எம்.எஸ்.ராஜ் என்பவர் இயக்கி வரும் இப்படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், அல்ருஃபியான் இசையமைப்பாளராகவும், தீபக் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ், சூரி தங்களது டுவிட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

இப்போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

'அவா’ புயலுக்கு 29 பேர் பலி: 13 ஆயிரம் பேர் தவிப்பு

Next Article
தேசிய பாடசாலை

தேசிய பாடசாலை மாணவர் அனுமதியில் முறைக்கேடு

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
0
Share