பாகிஸ்தான் சூப்பர் லீக் 2020 தொடரின் 2 ஆவது தகுதிச்சுற்று போட்டி முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் குவாலண்டர்ஸ் அணிகளுக்கு இடையே நவம்பர் 15 ஆம் திகதிநடைபெற்றது.
இந்தப் போட்டியில் லாகூர் குவாலண்டர்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
183 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணி 13.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஷாஹித் அப்ரிடி களமிறங்கினார். அப்போது முதல் பந்திலேயே டக் ஆகினார்.
ஷாஹித் அப்ரிடி விக்கெட்டை எடுத்த பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டார் ஹரிஸ் ராவஃப். இதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் தலைவர் மீது தனக்கு இருக்கும் மரியாதையை ஒரு வீடியோவில் ஹரிஸ் ராவஃப் வெளிப்படுத்தினார்.
இதற்கு பதிலளித்த ஷாஹித் அப்ரிடி, “அடுத்த முறை களத்தில் சந்திக்கும் போது மெதுவாக பந்து வீசுங்கள். இது விளையாட முடியாத யார்க்கர்” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து நடந்த இறுதிப்போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
It was a great and unplayable yorker Haris very well bowled! Please bowl slow to me next time 😜 congratulations to Qalandars for final berth. Look forward to an exciting match tomorrow. Thank you Sultans fans for supporting us throughout the season. https://t.co/GySOxr43ov
— Shahid Afridi (@SAfridiOfficial) November 16, 2020
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:
கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்
Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.